/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் ரூ.55 லட்சத்தை திருடியவர் மத்திய பிரதேசத்தில் கைது
/
கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் ரூ.55 லட்சத்தை திருடியவர் மத்திய பிரதேசத்தில் கைது
கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் ரூ.55 லட்சத்தை திருடியவர் மத்திய பிரதேசத்தில் கைது
கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் ரூ.55 லட்சத்தை திருடியவர் மத்திய பிரதேசத்தில் கைது
ADDED : டிச 26, 2025 06:47 AM

சிக்கபல்லாபூர்: கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில், தொழிலதிபரின், 55 லட்சம் ரூபாயை திருடியவர், மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஸ்வர ராவ். இவர், பெங்களூரில் இருந்த தன் வீட்டை விற்று விட்டு, 55 லட்சம் ரூபாய் பணத்துடன், கடந்த, 8ம் தேதி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் ஹைதராபாத்துக்கு பயணித்தார்.
சிக்கபல்லாபூர் மாவட்டம் அரூரு கிராமம் அருகேயுள்ள ஹோட்டல் முன், உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டது. வெங்கடேஸ்வர ராவும், பணப்பையை இருக்கையில் வைத்து விட்டு, சாப்பிட சென்றிருந்தார். சிறிது நேரத்துக்கு பின் திரும்பி வந்து பார்த்த போது, பணப்பை திருட்டு போயிருந்தது. இதைப்பற்றி சக பயணியரிடம் விசாரித்த போது, காரில் வந்த நபர் ஒருவர், பஸ் இருக்கையில் இருந்த பையை எடுத்துச் சென்றதாக கூறினர்.
இதுதொடர்பாக, ஹுடிபன்டே போலீஸ் நிலையத்தில், வெங்கடேஸ்வர ராவ் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை துவக்கினர். பணத்தை திருடியவர்கள் பயணித்த சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பல கோணங்களில் விசாரித்த போது, கொள்ளையர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
அதன்பின், ஹுடிபன்டே போலீசார் மத்திய பிரதேசத்துக்கு சென்று, அங்குள்ள போலீசார் உதவியுடன், அஸ்லம் கான், 45, என்பவரை நேற்று கைது செய்தனர். பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த மனீர்கான, அப்யாகான், ஷேரு ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இவர்களும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களே.
இவர்கள் பஸ்களை குறி வைத்து, பணம், தங்க நகைகள் திருடுவதை வழக்கமாக வைத்திருந்ததை, அஸ்லம் கான் ஒப்புக்கொண்டார். தலைமறைவான மூவரையும் தேடி வருகின்றனர்.

