/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வக்ப் சட்டத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தவர் ராஜஸ்தானில் கைது
/
வக்ப் சட்டத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தவர் ராஜஸ்தானில் கைது
வக்ப் சட்டத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தவர் ராஜஸ்தானில் கைது
வக்ப் சட்டத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தவர் ராஜஸ்தானில் கைது
ADDED : ஏப் 14, 2025 07:11 AM

தாவணகெரே : கடந்த வாரம் பார்லிமென்டில் வக்ப் சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு முஸ்லிம் பெண்கள் மத்தியில் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து பல கட்சிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இச்சட்டம் தொடர்பாக கபீர் கான் என்பவர் ஆட்சேபனைக்குரிய வகையில் தெரிவித்த கருத்துகள், சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து ஆசாத் நகர் போலீசார் தாமாக முன்வந்து, கபீர் கானை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அவருக்கு ஆதரவாக செயல்பட்ட தாவணகெரேயை சேர்ந்த அப்துல் கனி, 56, முகமது ஜுபேர், 40, ஆகியோரை இரண்டு நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கபீர் கான், ராஜஸ்தான் மாநிலம், ஆஜ்மீரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், கபீர் கானை கைது செய்து, தாவணகெரே அழைத்து வந்தனர். மாவட்ட எஸ்.பி., உமா பிரசாந்த் கூறுகையில், ''சமூக வலைதளத்தில் ஆட்சேபனைக்குரிய வகையில் பேசிய கபீர் கான் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி, கஸ்டடியில் எடுத்துள்ளோம். அவரிடம் விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.

