தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/முன்னாள் காதலருடன் சேர்ந்து இன்னாள் காதலரை கொன்ற பெண்ணுடன் ஒருவர் கைது

முன்னாள் காதலருடன் சேர்ந்து இன்னாள் காதலரை கொன்ற பெண்ணுடன் ஒருவர் கைது

முன்னாள் காதலருடன் சேர்ந்து இன்னாள் காதலரை கொன்ற பெண்ணுடன் ஒருவர் கைது


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: விஜயபுரா மாவட்டத்தின் ரோனிஹாளா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 40. இவரை பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவின் பள்ளிகேரி கிராமத்தை சேர்ந்த நபருக்கு, திருமணம் செய்து கொடுத்தனர்.

தம்பதிக்கு 18 வயதில் மகள் உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்ரீதேவிக்கும், இதே கிராமத்தை சேர்ந்த ரணவீர் சிங் ரஜபூத், 32, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.

இதற்கிடையே, ஸ்ரீதேவியின் மகளை, ரணவீர் சிங் ரஜபூத்தின் சகோதரர் நாராயண் என்பவருக்கு, திருமணம் செய்ய, பெண் கேட்டனர். ஆனால், இதில் ஸ்ரீதேவிக்கு விருப்பம் இல்லை. இதனால் இவருக்கும், ரணவீர் சிங் ரஜபூத்துக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.

பெண் கொடுக்க மறுத்ததால் இருவரின் குடும்பங்களுக்கு இடையே அவ்வப்போது சண்டையும் நடந்துள்ளது. ரணவீர் சிங்குடனான தொடர்பை, ஸ்ரீதேவி துண்டித்து கொண்டார்.

இது ரணவீர் சிங்குக்கு, கோபத்தை ஏற்படுத்தியது. பல விதங்களில் ஸ்ரீதேவிக்கு தொந்தரவு கொடுத்தார்.

இந்நிலையில், தான், திருமணத்துக்கு முன் காதலித்த பைருபவாரை தொடர்பு கொண்டு, ரணவீர் சிங்கால் தனக்கு ஏற்படும் பிரச்னைகளை கூறினார். அதன்பின் இருவரும் ரணவீர் சிங்கை கொலை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி பைருபவார், சில நாட்களுக்கு முன், பள்ளிகேரிக்கு வந்தார். சரியான நேரம் பார்த்து, ரணவீர் சிங்கை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இருவரும் தப்பினர்.

இது குறித்து, விசாரணை நடத்திய போலீசார், மொபைல் போன் அழைப்பு விபரங்களை ஆய்வு செய்த போது, ஸ்ரீதேவியுடன் தொடர்பில் இருந்தது தெரிந்தது. அவரை விசாரித்த போது, நடந்த விஷயங்களை கூறினார். அதன்பின் இவரையும், பை ருபவாரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us