தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பா.ஜ.,வினர் மீது வழக்குப்பதிவு செய்தால் போராட்டம் வெடிக்கும் : எடியூரப்பா

பா.ஜ.,வினர் மீது வழக்குப்பதிவு செய்தால் போராட்டம் வெடிக்கும் : எடியூரப்பா

பா.ஜ.,வினர் மீது வழக்குப்பதிவு செய்தால் போராட்டம் வெடிக்கும் : எடியூரப்பா


UPDATED : அக் 04, 2026 02:51 AM

ADDED : அக் 03, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 02:51 AM ADDED : அக் 03, 2026 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: வாக்காளர் பட்டியலில் சிறுபான்மையினர் நீக்க முயல்வதாக, பா.ஜ.,வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதை நிறுத்த வேண்டும் என டி.ஜி.பி., சலீமிடம் பா.ஜ., தலைவர்கள் மனு அளித்தனர். 'பா.ஜ.,வினர் மீது வழக்குப்பதிவு செய்வதை நிறுத்தாவிட்டால், மாநிலம் முழுதும் போராட்டம் வெடிக்கும்' என, முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பா எச்சரிக்கை விடுத்தார்.

கர்நாடகாவில் நடந்த எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் போது, பல மாவட்டங்களில் வாக்காளர் படிவம் 7-ஐ விநியோகித்து, சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த வாக்களர்களை பா.ஜ.,வினர் நீக்கியதாக முதல்வர் சிவகுமார் குற்றம்சாட்டினார்..

பல மாவட்டங்களில் படிவம் 7ல் முறைகேடு செய்ததாக, பா.ஜ., தொண்டர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

வலியுறுத்தல்

இதை கண்டித்து, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள், டி.ஜி.பி., சலீமிடம் மனு அளித்து, 'பா.ஜ.,வினர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக்கூடாது' என்று வலியுறுத்தினர்.

பின், எடியூரப்பா அளித்த பேட்டி:

எஸ்.ஐ.ஆர்., பணிகளின் போது படிவம் 7ஐ சமர்ப்பித்த விவகாரத்தில், பா.ஜ.,வினர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டால், மாநிலம் முழுதும் போராட்டம் வெடிக்கும். பா.ஜ., தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதை உடனடியாக நிறுத்தவும். ஏற்கனவே, பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து மறுபரிசீலனை செய்யும்.

தலைமை தேர்தல் கமிஷனர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதற்கு, முதல்வர் சிவகுமார் வெட்கப்பட வேண்டும். நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அதிகாரிக்கு அழுத்தம் அளிப்பது, கேடுகெட்ட செயலாகும். மாநில அரசை திருப்திப்படுத்த போலீசார் செயல்படக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்க்கட்சி தலைவர் அசோக் அளித்த பேட்டி:

படிவம் 7ஐ சமர்ப்பிப்பது குற்றமல்ல. வாக்காளரின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையமே தீர்மானிக்க வேண்டுமே தவிர, போலீஸ் நிலையம் தீர்மானிக்க முடியாது. போலீஸ் நிலையம், காங்கிரஸ் நிலையமாக மாறுகிறது.

வாக்காளர் பட்டியலில் வங்கதேசத்தினரை சேர்க்க காங்கிரஸ் அரசு முயல்கிறது. போலீசார் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்பதை டி.ஜி.பி.,யிடம் வலியுறுத்தினோம். இல்லையெனில், அடுத்த சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ., கூட்டணியே ஆட்சிக்கு வரும். அப்போது, சம்பந்தபட்ட போலீசாருக்கு கணக்கு தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சரியல்ல


பா.ஜ.,வினர் மீது நடவடிக்கை எடுத்தால் கட்சி வேடிக்கை பார்க்காது. படிவம் 7ல், கூறப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால், தேர்தல் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்வார்கள். அது தவறாக இருந்தால் நிராகரிக்கப்படும். இந்த விஷயத்தில் போலீசார் எப்.ஐ.ஆர்., போடுவது சரியல்ல. சிவகுமார் ரவுடி போல செயல்படுகிறார்.
- விஜயேந்திரா, பா.ஜ., மாநில தலைவர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us