/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தவர் சிக்கினார்
/
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தவர் சிக்கினார்
ADDED : ஜூலை 12, 2025 10:58 PM

காடுகோடி: பெண்கள் குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்த, வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு காடுகோடி சென்னசந்திராவில் வசிக்கும் 45 வயது பெண்ணும், அவரது 21 வயது மகளும், கடந்த 8ம் தேதி காலையில் வீட்டின் முன்பு உள்ள, குளியல் அறையில் குளித்து கொண்டு கொண்டு இருந்தனர்.
குளித்து முடித்துவிட்டு இளம்பெண் வெளியே வந்த போது, குளியல் அறை ஜன்னல் வழியாக, வாலிபர் ஒருவர், மொபைல் போனில் வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பினார்.
இது குறித்து, அந்த இளம்பெண், தனது தந்தையிடம் கூறினார். அவர் அளித்த புகாரில், காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வீட்டின் அருகே உள்ள பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் சென்னசந்திராவின் மொய்னுதீன், 24 என்பவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
அவரது மொபைல் போனை போலீசார் பார்த்த போது, பல பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்தது தெரிந்தது. அந்த வீடியோக்களை அழிக்க, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு மொபைல் போன் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மொய்னுதீனிடம் விசாரணை நடக்கிறது.