உடற்பயிற்சி முடித்து வீட்டுக்கு சென்றவர் மாரடைப்பால் மரணம்
உடற்பயிற்சி முடித்து வீட்டுக்கு சென்றவர் மாரடைப்பால் மரணம்
ADDED : ஜூன் 17, 2026 11:16 PM

அ நிறம் | அளவு
தாவணகெரே: தாவணகெரே நகர் கே.டி.ஜே., நகரை சேர்ந்தவர் சுஷில்குமார், 26. பாடி பில்டரான இவர், மாநில, தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். சர்வதேச ஆணழகன் போட்டிக்கு தயாராகி வந்தார்.
இதற்கி டையில், நேற்று முன்தினம் இரவு உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்ட பின், சுஷில் குமார் தனது வீட்டுக்கு சென்றார். வீட்டுக்குள் சென்ற சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார். இதை பார்த்து பதறிய குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
அவரை பரிசோதித்த டாக்டர்கள், சுஷில் குமார் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக, மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
