தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாணவியுடன் கள்ளத்தொடர்பு: பேராசிரியர் 'சஸ்பெண்ட்' ஏ.பி.வி.பி., போராட்டத்துக்கு பணிந்தது பல்கலை

 மாணவியுடன் கள்ளத்தொடர்பு: பேராசிரியர் 'சஸ்பெண்ட்' ஏ.பி.வி.பி., போராட்டத்துக்கு பணிந்தது பல்கலை

 மாணவியுடன் கள்ளத்தொடர்பு: பேராசிரியர் 'சஸ்பெண்ட்' ஏ.பி.வி.பி., போராட்டத்துக்கு பணிந்தது பல்கலை

2


ADDED : ஜூன் 17, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 11:16 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தார்வாட்: மாணவியுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ள குற்றச்சாட்டை எதிர்கொ ண்டுள்ள, கர்நாடக பல்கலைக்கழக தாவரவியல் பிரிவு பேராசிரியர் தேவராஜ் தங்கதுரை 'சஸ்பெண்ட ் ' செய்யப்பட்டார்.

தார்வாடில் உள்ள கர்நாடக பல்கலைக்கழகத்தில், தாவரவியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றுபவர் தேவராஜ் தங்கதுரை. 45.

விஜயபுராவை சேர்ந்த மாணவி ஒருவர், பிஹெச்.டி., படிப்பதற்காக இந்த பல்கலைக்கழகத்துக்கு வந்தார். தன்னிடம் படிக்க வந்த மாணவியுடன், தேவ ராஜ் தங்கதுரைக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்திருந்தனர்.

மாணவியுடன் நெருக்கமாக உள்ள சில போட்டோக்களை இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதை அறிந்த மாணவியின் பெற்றோர், மகளின் படிப்பை நிறுத்தி விட்டு ஊருக்கு அழைத்து சென்றனர்.

ஊருக்கு சென்ற பிறகும் மாணவியை தேவராஜ் தங்கதுரையால் மறக்க முடியவில்லை.

விஜயபுராவில் இருந்து பிஹெச்.டி., படிக்க, இந்த பல்கலைக்கழகத்துக்கு வந்த மாணவர்களிடம், மாணவியை அழைத்து வரும்படி நெருக்கடி கொடுத்தார்.

மாணவியுடன், பேராசிரியர் கள்ளத்தொடர்பு வைத்திருந்த விஷயம், வெளிச்சத்துக்கு வந்தும் அவர் மீது, பல்கலைக்கழக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து, மாணவர்கள் போராட்டம் நடத்தியும் பயன் இல்லை.

இந்நிலையில் பேராசிரியர் மீது, நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி, ஏ.பி.வி.பி., தொண்டர்கள், நேற்று பல்கலைக்கழகத்தின் நிர்வாக அலுவலகம் முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார், ஏ.பி.வி.பி., தொண்டர்களை கட்டுப்படுத்த முயற்சித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை உருவானது.

அப்போது, அங்கு வந்த துணை வேந்தர், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி, பேராசிரியர் தேவராஜ் தங்கதுரை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகே, ஏ.பி.வி.பி., தொண்டர்கள், போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால், 'அவரை சஸ்பெண்ட் செய்யும் வரை, அங்கிருந்து நகரமாட்டோம ் ' என, தொண்டர்கள் அங்கேயே அமர்ந்து கொண்டனர். அவர்களின் போராட்டத்துக்கு பணிந்து, தேவராஜ் தங்கதுரையை சஸ்பெண்ட் செய்து, பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. அவரது செய்கை குறித்து, விசாரணை நடத்த சிறப்பு விசாரணை கமிட்டியும் அமைத்தது.

போலீசாரும் கூட தேவராஜ் தங்கதுரை மீது, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என, ஏ.பி.வி.பி., தொண்டர்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us