தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சொகுசு காருக்குள் இறந்து கிடந்த நபர்

 சொகுசு காருக்குள் இறந்து கிடந்த நபர்

 சொகுசு காருக்குள் இறந்து கிடந்த நபர்


ADDED : செப் 20, 2026 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 11:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோரமங்களா: பெங்களூரில், சொகுசு காருக்குள் இறந்து கிடந்த, நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு, கோரமங்களா 8வது பிளாக் பகுதியில், கோரமங்களா போலீஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து, 100 மீட்டர் துாரத்தில் உள்ள ஹோட்டல் முன் நேற்று காலை, 'மெர்சிடஸ் பென்ஸ்' கார் கார் நீண்ட நேரமாக நின்றிருந்தது.

இதை கவனித்த ஹோட்டல் ஊழியர்கள் காருக்குள் பார்த்த போது, டிரைவர் இருக்கையில் ஒருவர் உடல் அசைவின்றி இருந்தார்.

தகவல் அறிந்த கோரமங்களா போலீசார் அங்கு சென்று பார்த்த போது, அந்த நபர் இறந்து கிடந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் குடகு மாவட்டத்தின் விராஜ்பேட் என்ற பகுதியை சேர்ந்த சலீம் அக்பர், 46, என்பது தெரிந்தது. அவர் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us