தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆட்சேபகர கருத்து கூறிய பிரதாப் சிம்ஹா மீது வழக்கு

 ஆட்சேபகர கருத்து கூறிய பிரதாப் சிம்ஹா மீது வழக்கு

 ஆட்சேபகர கருத்து கூறிய பிரதாப் சிம்ஹா மீது வழக்கு


ADDED : செப் 20, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: விநாயகர் ஊர்வலத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

'மைசூரு மசூதி தெருவில், விநாயகர் ஊர்வலம் செல்லக்கூடாது; இதை மீறுவோரை கைது செய்வேன்' என, டி.நரசிபுரா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தனஞ்செய் கூறினார். இதற்கு, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா எதிர்ப்பு தெரிவித்தார்.

டி.நரசிபுராவில், கடந்த 18ம் தேதி நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பிரதாப் பங்கேற்றார். அப்போது அவர், இன்ஸ்பெக்டர் தனஞ்செய் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இவ்விவகாரத்தில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், மத ரீதியான மோதலை துாண்டும் வகையில் பேசியதாகவும் அவர் மீது டி.நரசிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை மாவட்ட எஸ்.பி., மல்லிகார்ஜுன் பாலதண்டி நேற்று உறுதி செய்தார்.

இதுகுறித்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''பிரதாப் மீது ஏற்கனவே, 25 வழக்குகள் உள்ளன. அதில், இதுவும் ஒன்று. போலீசாரின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம். பின்வாங்கவும் மாட்டோம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us