தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/குவைத்தில் இருந்து வந்தவர் ஏர்போர்ட்டில் உயிரிழப்பு

குவைத்தில் இருந்து வந்தவர் ஏர்போர்ட்டில் உயிரிழப்பு

குவைத்தில் இருந்து வந்தவர் ஏர்போர்ட்டில் உயிரிழப்பு


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 11:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குடகு: குவைத்தில் பணியாற்றி விட்டு, சொந்த ஊருக்கு செல்ல, பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்கியவர், மாரடைப்பால் உயிரிழந்தார்.

குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின் சுன்டிகொப்பா கிராமத்தில் வசித்தவர் பஷீர், 48. இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். பஷீர் பல ஆண்டுகளாக, குவைத்தில் பணியாற்றி வந்தார். அங்கு சம்பாதிக்கும் பணத்தை மனைவி, மகள்களின் கணக்குக்கு அனுப்பினார். வெளி நாட்டில் இருந்தே, குடும்பத்தை நிர்வகித்தார்.

விடுமுறை கிடைக்காததால், பல ஆண்டுகளாக சொந்த ஊருக்கு வர முடியவில்லை. தற்போது விடுமுறை கிடைத்ததால், சில நாட்கள் மனைவி, மகள்களுடன் இருந்து விட்டு செல்லலாம் என்ற ஆசையில், குவைத்தில் இருந்து புறப்பட்டார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

வீட்டுக்கு செல்வதற்காக, வெளியே வரும் போது, விமான நிலைய வளாகத்தில், அவருக்கு இருதயத்தில் வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்வதற்குள், மாரடைப்பால் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் பஷீரின் உடலை சுன்டிகொப்பாவுக்கு எடுத்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us