தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மனநலம் பாதித்த சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 21 ஆண்டுகள் சிறை

மனநலம் பாதித்த சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 21 ஆண்டுகள் சிறை

மனநலம் பாதித்த சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 21 ஆண்டுகள் சிறை


UPDATED : நவ 28, 2026 12:00 AM

ADDED : நவ 27, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 12:00 AM ADDED : நவ 27, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனுக்கு, 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, ‘போக்சோ’ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தாவணகெரே மாவட்டம், ஹொன்னாளி பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை, ஹொன்னாளி பிதரகட்டே கிராமத்தை சேர்ந்த கணேஷ், 24, பல முறை பலாத்காரம் செய்தார்.

இதை அறிந்த சிறுமியின் தாய் ஹொன்னாளி போலீஸ் நிலையத்தில், 2024ம் ஆண்டு ஜூனில் புகார் செய்தார். போக்சோ வழக்கில் கணேஷ் கைது செய்யப்பட்டார்.

தாவணகெரே சிறப்பு, போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி ஸ்ரீராம் நாராயண ஹெக்டே நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.

கணேஷ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு, 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு, மாநில சட்டசேவைகள் ஆணையம் 10.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us