தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 40 ஆண்டு சிறை

 மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 40 ஆண்டு சிறை

 மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு 40 ஆண்டு சிறை


ADDED : மார் 06, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: மனநிலை சரியில்லாத சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெலகாவி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் வசிப்பவர் தரெப்பா என்ற தீரஜ் அங்கத கனசே, 25. இதே பகுதியில், 16 வயது சிறுமி வசிக்கிறார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 2025ன் ஆகஸ்ட் 25ம் தேதி, சிறுமியின் பெற்றோர் பணிக்கு சென்றிருந்தனர். சிறுமி தனியாக திண்ணையில் அமர்ந்திருந்தார்.

இதை கவனித்த தீரஜ், சிறுமியை வீட்டுக்குள் இழுத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். வீட்டுக்கு வந்த பெற்றோரிடம் சிறுமி நடந்ததை கூறினார். அவர்கள் உடனடியாக சங்கேஸ்வரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசாரும் தீரஜை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையை முடித்து பெலகாவியின் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் மற்றும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணையில் தீரஜின் குற்றம் உறுதியானதால் அவருக்கு, 40 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி புஷ்பலதா நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ஆறு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, மாவட்ட சட்ட சேவைகள் வாரியத்துக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us