ADDED : செப் 26, 2026 03:27 AM
ஷிவமொக்கா: நடத்தையை சந்தேகித்து, மனைவியை கொலை செய்த கணவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஷிவமொக்காவின் திப்பு நகர், ஆறாவது கிராசில் வசிப்பவர் அப்துல் ஷோஹெப், 35. இவர் சில ஆண்டுகளுக்கு முன், கவுசர், 30, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சில மாதங்களுக்கு பின், மனைவியின் நடத்தையில், அப்துல் ஷோஹெபுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவ்வப்போது, தம்பதிக்கிடையே தகராறு நடந்தது.
இதனால், 2021ல் மனைவியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று கத்தி, அரிவாளால் வெட்டியும், கற்களால் அடித்தும் கொலை செய்தார்.
இதுகுறித்து, கவுசரின் தாய் அளித்த புகாரின்படி, நடவடிக்கை எடுத்த துங்காநகர் போலீசார், அப்துல் ஷோஹெபை கைது செய்தனர்.
விசாரணையை முடித்த போலீசார், ஷிவமொக்காவின், 2வது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் அவரது குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 2.10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ப்ரீத்தி நேற்று தீர்ப்பளித்தார்.
