தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 30 ஆண்டாக கொத்தடிமையாக இருந்தவர் மீட்பு: பெண் கைது

 30 ஆண்டாக கொத்தடிமையாக இருந்தவர் மீட்பு: பெண் கைது

 30 ஆண்டாக கொத்தடிமையாக இருந்தவர் மீட்பு: பெண் கைது


ADDED : மார் 13, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுப்பி: உடுப்பியில், கொரகா பட்டியல் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவரை, 30 ஆண்டுகளாக கொத்தடிமையாக வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார்.

உடுப்பி மாவட்டம் குந்தாபூர் தாலுகா கன்யான் கிராமத்தை சேர்ந்தவர் நாகா, 65; கொரகா பட்டியல் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர். 30 ஆண்டுகளுக்கு முன், கப்பைலுவை சேர்ந்த சுப்பண்ணா ஷெட்டி என்பவர், தன் வீட்டுக்கு வேலை செய்ய நாகாவை அழைத்து வந்தார்.

சுப்பண்ணா ஷெட்டியின் மறைவுக்கு பின், அவரது மகள் ரஜனி ஷெட்டியும், அவரது கணவர் கருணாகர ஷெட்டியும், நாகாவை தங்கள் வீட்டில் பணியாற்ற வலியுறுத்தினர்.

தினமும் வீட்டு வேலை, கால்நடைகள் மேய்த்தல், தோட்டத்தில் பணி, கால்நடைகள் மற்றும் கன்றுகளை பராமரித்தல், சாணம் அகற்றுவது, வயல்களில் வேலை, வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்வது போன்றவற்றை செய்து வந்தார்.

அத்துடன், கால்நடைகள் இருக்கும் கொட்டகையில் தங்க வைக்கப்பட்டார். சரியான உணவும், சரியாக ஊதியமும் கொடுப்பதில்லை, வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. நாகாவை கொத்தடிமை போன்று கணவன் - மனைவி இருவரும் நடத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து குந்தாபூர் கிராமப்புற போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய குந்தாபூர் டி.எஸ்.பி., குல்கர்னி, ரஜனி ஷெட்டியை கைது செய்ய உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட ரஜனி ஷெட்டி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மங்களூரு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட நாகாவை அவரின் குடும்பத்தி னருடன் சேர்த்து வைக்க ஏ.எஸ்.பி., சமூக நலத்துறை துணை இயக்குநர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

நாகாவுக்கு மறுவாழ்வு அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us