sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுத்தையை பிடிக்க வைத்த கூண்டில் சிக்கி தவித்த நபர்

 சிறுத்தையை பிடிக்க வைத்த கூண்டில் சிக்கி தவித்த நபர்

 சிறுத்தையை பிடிக்க வைத்த கூண்டில் சிக்கி தவித்த நபர்


ADDED : டிச 24, 2025 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2025 07:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்ராஜ் நகர்: சிறுத்தையை பிடிக்க வைத்த கூண்டு எப்படி உள்ளது என பார்க்க ஆசைப்பட்டு கூண்டிற்குள் சென்ற நபர், அதில், சிக்கிக் கொண்டார். மூன்று மணி நேரத்துக்கு பின் வெளியே வந்தார்.

சாம்ராஜ் நகர் மாவட்டம் கங்கவாடி கிராமம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வந்தது. இது குறித்து வனத்துறையினருக்கு, கிராமத்தினர் தகவல் அளித்தனர். அவர்களும் அப்பகுதிகளை ஆய்வு செய்து, கங்கவாடி கிராமத்தில், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர்.

இந்த கூண்டை பார்த்த, அதே கிராமத்தை சேர்ந்த கிட்டி என்பவர், உள்ளே எப்படி உள்ளது என, பார்க்க விரும்பினார். அதனால், நேற்று யாரும் இல்லாத நேரத்தில் கூண்டுக்குள் சென்றார். சென்ற சில விநாடியில், கூண்டு தானாக மூடிக் கொண்டது.

பதற்றமடைந்த கிட்டி, கூண்டை திறக்க முயற்சித்தார்; பலனளிக்கவில்லை. இதனால், உதவிக்காக கூக்குரலிட்டார்.

அந்த நேரத்தில் உடனடியாக யாரும் அங்கு வரவில்லை.

பின், அவ்வழியாக சென்ற விவசாயிகளை பார்த்த கிட்டி, 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்று கூச்சலிட்டார். இதை பார்த்த விவசாயிகள் கூண்டை திறந்தனர். மூன்று மணி நேரம் கூண்டில் சிக்கிய அவர் வெளியே வந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us