/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஆதார்' புதுப்பிக்க முயன்றவரிடம் ரூ.79,000 மோசடி
/
'ஆதார்' புதுப்பிக்க முயன்றவரிடம் ரூ.79,000 மோசடி
ADDED : செப் 05, 2025 11:06 PM
உடுப்பி: 'ஆதார்' அட்டையை புதுப்பிக்க முயன்றவர், 79,000 ரூபாயை சைபர் மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
உடுப்பி மாவட்டம், சிருவா கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டனி ரிச்சர்ட் வாஸ், 54. இவரது மொபைல் போனுக்கு கடந்த மாதம் 30ம் தேதி, அடையாளம் தெரியாத நபரிடமிருந்து 'மெசேஜ்' வந்தது. இதில், ஆதார் அட்டையை புதுப்பிக்கும்படி கூறப்பட்டிருந்தது.
அவர் அந்த மெசேஜில் வந்த லிங்கை கிளிக் செய்து, விபரங்களுடன் பதிவு செய்தார்.
கடந்த 3ம் தேதி தன் வங்கிக் கணக்கில் உள்ள இருப்பை அவர் சரிபார்த்தபோது, 79,000 ரூபாய் பறிபோனது தெரிந்தது. இது குறித்து சிருவா போலீஸ் நிலையத்தில் ஆண்டனி ரிச்சர்ட் வாஸ் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.