ADDED : ஜூலை 15, 2026 12:37 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு உதவிய முகமது ஹனிப் கானுக்கு, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம், 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு உதவியதாகவும், முகமது ஹனிப் கான் என்பவரை, கடந்த, 2020ல் கர்நாடக மாநில போலீசார் கைது செய்தனர்.
பின், இவ்வழக்கு, என்.ஐ.ஏ., எனும் தேசிய விசாரணை முகமைக்கு மாற்றப்பட்டது. இவர் மீது அந்த விசாரணை அமைப்பினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணை நடத்திய நீதிமன்றம், முகமது ஹனிப் கான் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையும், 48,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப் பளித்தது.
