தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மருமகளை கொலை செய்தவர் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை

 மருமகளை கொலை செய்தவர் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை

 மருமகளை கொலை செய்தவர் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜன 15, 2026 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2026 07:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெலமங்களா: கோடாரியால் தாக்கி மருமகளை கொலை செய்த மாமா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின், குதுரெகெரே காலனியில் வசித்தவர் தாட்சாணியம்மா, 55. இவரது கணவர் நாகராஜ், கடந்த எட்டு ஆண்டுக்கு முன் காலமானதால், இரண்டு மகள்களுடன் வசித்தார்.

இருவருக்கும் திருமணம் செய்து வைத்த பின், சிறிய அளவில் வட்டி தொழில், வீடுகளை வாடகைக்கு கொடுத்ததில் கிடைத்த பணத்தை வைத்து, தனியாக வசித்தார்.

இம்மாதம் 10ம் தேதி மதியம், தாட்சாணியம்மா தன் பேரனை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது, பைக்கில் வந்த ஒருவர், பேரனின் கண் முன்னால் தாட்சாணியம்மாவை கோடாரியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இது குறித்து, மாதநாயகனஹள்ளி போலீசார் விசாரணை நடத்திய போது, தாட்சாணியம்மாவை கொலை செய்தது, அவரது மாமா வீரபத்ரா, 60, என்பது தெரிந்தது.

இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் நிலத்தகராறு இருந்தது. இதே காரணத்தால் கொலை நடந்ததை, போலீசார் கண்டுபிடித்தனர். வீரபத்ராவை தேடி வந்தனர்.

கொலை சம்பவத்துக்கு பின், தலைமறைவாக இருந்த வீரபத்ரா, நேற்று முன்தினம் நள்ளிரவு, தொட்டபல்லாபூரின், கோளூரு கிராமத்தில் உள்ள தன் அக்காவின் வீட்டுக்கு வந்தார். அவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, தோட்டத்துக்கு சென்ற வீரபத்ரா, அங்கிருந்த மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை இதை கண்ட அப்பகுதியினர், தொட்டபல்லாபூர் ஊரக போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், உடலை மீட்டனர். போலீசாரிடம் சிக்குவோம் என்ற பீதியில், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us