ADDED : மே 06, 2026 11:57 PM
அ நிறம் | அளவு
கேசம்பள்ளி: கேசம்பள்ளி கிராமத்தில் 'ஸ்ரீவத்சலா சமுதாய கிளினிக்' என்ற பெயரில் மருத்துவ கிளினிக் நடத்தப்பட்டு வந்தது.
இந்த கிளினிக் மருத்துவத்துறை அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாக தெரிய வந்தது. இதனால், அப்பகுதியின் 'பிரபுத்த பிரஜா வேதிகே' என்ற அமைப்பினர் கேசம்பள்ளி போலீஸ் நிலையத்தில், புகார் செய்தனர்.
இதை அறிந்த மனோஜ், 42, கிளினிக்கை மூடி விட்டு தப்பியோட முயற்சித்தார்.
பிரபுத்த பிரஜா வேதிகே அமைப்பினர், அவரை தடுத்து நிறுத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
