/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
10 வயது சிறுமி பலாத்காரம் தப்பியோடியவருக்கு வலை
/
10 வயது சிறுமி பலாத்காரம் தப்பியோடியவருக்கு வலை
ADDED : நவ 21, 2025 06:18 AM
உத்தரகன்னடா: வாங்கிய கடனை தந்தை அடைக்காததால், அவரது 10 வயது மகளை பலாத்காரம் செய்த நபரை போலீசார் தேடுகின்றனர்.
உத்தரகன்னடா மாவட்டம், சிர்சியில் வசிக்கும் ஒருவர், குடும்ப தேவைக்காக நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தார். அதை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்தார். கடனை கேட்பதற்காக, நிறுவனத்தை சேர்ந்த மதீன், 37, நேற்று முன்தினம் மாலையில், நபரின் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. அவரது 10 வயது மகள் விளையாடிக் கொண்டிருந்தார்.
தன் பெற்றோர் வெளியே சென்றிருப்பதாக, சிறுமி கூறினார். அப்போது மதீன், சிறுமியை பலவந்தமாக இழுத்துச் சென்று, பலாத்காரம் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பினார். சிறிது நேரத்துக்கு பின், வீட்டுக்கு வந்த தாயிடம் சிறுமி நடந்ததை கூறினார். அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக சிர்சி ஊரக போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். தலைமறைவான மதீனை, போலீசார் தேடி வருகின்றனர்.

