தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திரைப்பட இயக்குநராக விரும்பியவர் தற்கொலை

 திரைப்பட இயக்குநராக விரும்பியவர் தற்கொலை

 திரைப்பட இயக்குநராக விரும்பியவர் தற்கொலை


ADDED : ஜூன் 24, 2026 12:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 12:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாதநாயக்கனஹள்ளி: திரைப்பட இயக்குனராக வேண்டும் என்று ஆசைப்பட்ட, தனியார் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு ரூரல் தியாமகொண்டலுவை சேர்ந்தவர் மஞ்சுநாத், 35. நெலமங்களா தாலுகாவின் மாதநாயக்கனஹள்ளியில் தனியார் நிறுவன ஊழியராக வேலை செய்தார். ரவுதனஹள்ளியில் வாடகை வீட்டில் வசித்தார். திரைப்பட இயக்குனராக வேண்டும் என்று ஆசைப்பட்ட மஞ்சுநாத், குறும்படங்களை தயாரித்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார்.

இந்நிலையில், நேற்று காலை, தான் வசித்த வீட்டில் மஞ்சுநாத் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் அலுவலகத்திற்கு வராததால், நண்பர்கள் சென்று பார்த்தனர்.

அப்போது, மஞ்சுநாத் தற்கொலை செய்தது தெரிந்தது. அங்கு சென்ற மாதநாயக்கனஹள்ளி போலீசார், மஞ்சுநாத் அறையில் இருந்து கடிதத்தை கைப்பற்றினர்.

அதில் அவர், 'எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள்; உங்களுக்கு நான் நல்ல மகனாக இருக்கவில்லை' என, கடிதத்தில் எழுதியிருந்தார்.

தற்கொலை செய்வதற்கு முன் தான் பயன்படுத்திய மொபைல் போனை யும் அவர் உடைத்திருந்தார். திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற ஆசைக்கு, யாருக்கும் இடைஞ்சலாக இருந்தனரா என, போலீசார் விசாரணையை துவக்கி யுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us