ADDED : ஜூன் 24, 2026 12:22 AM

ராம்நகர்: ''பிடதியில், வளர்ச்சி என்ற பெயரில், விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது கூடாது,'' என, சர்வோதயா கர்நாடகா கட்சி -எம்.எல்.ஏ., தர்ஷன் புட்டண்ணையா கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
பிடதியில் உள்ள வளமான நிலங்களில், கட்டடங்கள் கட்டுவது சரியல்ல. விவசாயம் மற்றும் விவசாயி நலன்களை மாநில அரசு பாதுகாக்க வேண்டும்.
விவசாய நிலங்களில் கட்டடம் கட்டுவது வளர்ச்சியல்ல. விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்தும் செயல் அது.
வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் விவசாயிகளை வீதியில் நிறுத்தக்கூடாது. அவர்களுக்கு அநீதி இழைக்கக்கூடாது.
பிடதி டவுன்ஷிப் திட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு, என் ஆதரவு எப்போதும் உண்டு. இந்த டவுன்ஷிப் திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும். இவ்விஷயத்தில், முதல்வர் சிவகுமாரிடம் பேச்சு நடத்தவும் தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
