UPDATED : அக் 27, 2026 12:00 AM
ADDED : அக் 26, 2026 07:02 PM
வர்த்துார்: பெங்களூரின் வர்த்துாரில், ‘மோஜோ’ என்ற பெயரில் பீட்சா கடை உள்ளது. இந்த கடையில் சுமன்குமார் நாயக், 22, ஜிப்காந்த் போத்தார், 25 ஆகியோர் ஊழியர்களாக வேலை செய்தனர். இவர்கள் இருவரும் இரவு பணிக்கு வராமல் அடிக்கடி, ‘டிமிக்கி’ கொடுத்தனர்.
நேற்று முன்தினம் இரவு கடையின் மேலாளர் சதீஷ்குமார், ஊழியர்கள் இருவரையும் அழைத்து, இரவு பணிக்கு வராமல் இருப்பது பற்றி கேட்டார். ‘இரவு பணிக்கு நாங்கள் வர மாட்டோம்’ என்று இருவரும் கூறினர்.
அப்போது ஏற்பட்ட தகராறில், கடையில் இருந்த எல்.இ.டி., டிவியை சுமன்குமார், ஜிப்காந்த் சேதப் படுத்தினர்.
தடுக்க வந்த இன்னொரு ஊழியரை கத்தியை காட்டி மிரட்டியதுடன், வெளியே நின்ற சதீஷ்குமார் பைக்கிற்கு தீ வைத்துவிட்டு தப்பினர்.
அவர் அளித்த புகாரில், இருவர் மீதும் வர்த்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடுகின்றனர்.
