தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கன்னட பள்ளிகள் மூடல்: தீர்வு காண அமைச்சர் உறுதி

கன்னட பள்ளிகள் மூடல்: தீர்வு காண அமைச்சர் உறுதி

கன்னட பள்ளிகள் மூடல்: தீர்வு காண அமைச்சர் உறுதி


UPDATED : அக் 27, 2026 12:00 AM

ADDED : அக் 26, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 12:00 AM ADDED : அக் 26, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: ‘‘மாநிலத்தில் மூடப்பட்டு வரும் கன்னட மொழி பள்ளிகளை பாதுகாக்கவும், அவற்றின் பிரச்னைகளை தீர்க்கவும், நவ., 1ம் தேதி நடக்கும் கன்னட ராஜ்யோத்சவத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும்,’’ என பள்ளி கல்வி எழுத்தறிவு துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.

ஷிவமொக்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாநிலத்தில் மூடப்பட்டு வரும் கன்னட மொழி பள்ளிகளை பாதுகாக்கவும், அவற்றின் பிரச்னைகளை தீர்க்கவும், நவ., 1ம் தேதி நடக்கும் கன்னட ராஜ்யோத்சவத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். இதற்கு முன்னதாக, அக்., 29ம் தேதி முதல்வருடன் ஆலோசிக்கப்படும்.

பல்வேறு துறைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதால், இது தொடர்பாக விவாதிக்க அதிகாரிகள் காத்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்ட பள்ளிகளின் கணக்கும், எதிர்காலம் குறித்து அனைத்து தகவல்களும் என்னிடம் உள்ளன. கன்னட மொழி வழி பள்ளிகளை காப்பாற்றுவதே எங்கள் அரசின் முதன்மை பொறுப்பு.

மாணவர்களுக்கு வினியோகிக்கப்படும் காலணிகளின் தரம் குறித்து எந்த புகாரும் வரவில்லை. தரம் நன்றாக உள்ளது; அளவில் மட்டுமே சிறிய வித்தியாசம் உள்ளது. 45 லட்சம் காலணிகளை வழங்கும்போது, இத்தகைய சிறு பிரச்னைகள் ஏற்படுவது இயல்பானது. தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பேசிய பின், இந்த வித்தியாசம் சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us