/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லால்பாக் பூங்காவில் மா, பலா மேளா துவக்கம்
/
லால்பாக் பூங்காவில் மா, பலா மேளா துவக்கம்
ADDED : மே 30, 2025 11:37 PM

பெங்களூரு: கர்நாடக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில், பெங்களூரு லால்பாக் பூங்காவில் மா, பலாப்பழ மேளாவை போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி நேற்று துவக்கி வைத்தார்.
மேளாவில் மாம்பழம் மேம்பாடு மற்றும் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் நாகராஜ் கூறியதாவது:
ஐந்து முதல் 10 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும். விவசாயிகளிடம் இருந்தே நேரடியாக பழங்களை வாங்கலாம். மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இருந்து, விவசாயிகள் பல்வேறு ரக மாம்பழங்களை கொண்டு வந்துள்ளனர்.
மேளாவில் 119 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 18 கடைகளில் பழங்கள் மட்டுமின்றி, மற்ற விளைச்சல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சில வெளிநாடுகளின் பழங்களும் இடம் பெற்றுள்ளன.
இம்முறை 1,500 டன்னுக்கும் அதிகமான மாம்பழம், 700 டன்னுக்கும் மேற்பட்ட பலாப்பழம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். குறைந்த விலைக்கு தரமான பழங்கள் வாங்கலாம்.
மேளா, வரும் ஜூன் 24ம் தேதி வரை நடக்கும். தினமும் காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை மேளா நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.