/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓட்டு திருட்டு எச்சரிக்கை மணி மன்சூர் அலி கான் குற்றச்சாட்டு
/
ஓட்டு திருட்டு எச்சரிக்கை மணி மன்சூர் அலி கான் குற்றச்சாட்டு
ஓட்டு திருட்டு எச்சரிக்கை மணி மன்சூர் அலி கான் குற்றச்சாட்டு
ஓட்டு திருட்டு எச்சரிக்கை மணி மன்சூர் அலி கான் குற்றச்சாட்டு
ADDED : ஆக 27, 2025 07:43 AM

பெங்களூரு : ''பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மஹாதேவபுராவில் நடந்த ஓட்டுத் திருட்டு, அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணி,'' என, லோக்சபாவில் போட்டியிட்டு தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலி கான் தெரிவித்தார்.
கடந்தாண்டு நடந்த பெங்களூரு மத்திய லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மன்சூர் அலி கான் தோல்வியடைந்தார். இத்தொகுதிக்கு உட்பட்ட மஹாதேவபுரா சட்டசபை தொகுதியில் தான், ஓட்டு திருட்டு நடந்ததாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி வந்தார். தற்போது இது பொய் என நிரூபணமாகி உள்ளது.
இதற்கிடையில் லோக்சபாவில் தோல்வியடைந்த மன்சூர் அலி கான் கூறியதாவது:
பெங்களூரு மத்திய தொகுதியில் மட்டுமல்ல, பல இடங்களிலும் ஓட்டுத் திருட்டு நடந்துள்ளது. ஓட்டுப் போடும் உரிமையை மதிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் இது ஒரு எச்சரிக்கை மணி.
நான், ஒரு நபரின் பிரசாரத்தை பற்றியோ அல்லது ஒரு வேட்பாளரை பற்றியோ பேசவில்லை. குரல்களை அழிக்கும் ஒரு அமைப்பை பற்றி பேசுகிறேன். நாட்டில் தற்போது சோதனை காலம். நாம் இப்போதே செயல்படவில்லை என்றால், இந்த விஷம் அனைத்து இடங்களுக்கும் பரவும்.
இவ்வாறு அவர் கூறினார்.