மருத்துவ வசதியில் அலட்சியம் கூடாது என்கிறார் மஞ்சுநாத்
மருத்துவ வசதியில் அலட்சியம் கூடாது என்கிறார் மஞ்சுநாத்
ADDED : மே 28, 2026 12:11 AM
அ நிறம் | அளவு
கோலார்: கோலார் எஸ்.என்.ஆர்., மாவட்ட மருத்துவமனையில், கோலார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் தலைமையில், சுகாதார பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் கோலார் மாவட்ட சுகாதாரத்துறை தலைமை அதிகாரி டாக்டர் ஜெகதீஷ் பேசுகையில்,''கோலார் மாவட்ட மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் மருத்துவக் கல்லூரி மாதிரியில், படிப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
கோலார், காங்., - எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் பேசுகையில், ''சுகாதார விஷயங்களில் எந்த அலட்சியமும் இருக்கக்கூடாது. நோயாளிகளுக்கு முறையான தகவல்களும், சேவையும் வழங்கப்பட வேண்டும்,'' என்றார்.
காங்., - எம்எல்.சி., அனில்குமார் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
