தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வானிலை மாற்றத்தால் பரவும் பல நோய்கள்

வானிலை மாற்றத்தால் பரவும் பல நோய்கள்

வானிலை மாற்றத்தால் பரவும் பல நோய்கள்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: வானிலை மாற்றம் காரணமாக, பெங்களூரில் வைரல் காய்ச்சல், சளி, இருமல், வாந்தி, வயிற்று போக்கால் அவதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கவனமாக இருக்கும்படி சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரில் மாறி வரும் வானிலையால், மக்களின் ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படுகிறது. ஒரு நாள் மழை, மறுநாள் கொளுத்தும் வெயில் என, சூழ்நிலை மாறுகிறது. இதனால் தொற்று நோய்கள் பரவுகின்றன. மக்கள் நோய்களால் அவதிப்படுகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில், வைரல் காய்ச்சல், இருமல், சளி, வாந்தி, வயிற்று போக்கு என, மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், அரசு மருத்துவமனைகளில் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறார்கள், மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

நோய் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து, சிகிச்சை பெறுங்கள். வானிலை மாற்றத்தை அலட்சியம் செய்யாதீர்கள். வரும் நாட்களில் டெங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தண்ணீரை கொதிக்க வைத்து அருந்துவது நல்லது. வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இது குறித்து, சுகாதார துறை பிறப்பிக்கும் உத்தரவுகளை பின்பற்றினால் மட்டுமே, நோய்களை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us