தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி ரக் ஷா

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி ரக் ஷா

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி ரக் ஷா


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 06:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர்-

தட்சிண கன்னடா மாவட்டம், கடபா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகுஞ்சேஸ்வரா பி.யு., கல்லுாரியில், பி.யு., முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி டி.ரக் ஷா, 16. இவர் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது கையை ரப்பர் போல வளைக்கும் திறன் கொண்டவர். இதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு உள்ளனர்.

இதை வைத்து ஏதாவது ஒரு சாதனை செய்ய வேண்டும் என ரக் ஷா முடிவு செய்தார். இது குறித்து, பள்ளி ஆசிரியர்களிடம் கூறினார்.

இந்த யோசனையை ஏற்ற பள்ளி நிர்வாகம், கடந்த மாதம் 26ம் தேதி, பள்ளி வளாகத்திலேயே ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

இந்தநிகழ்ச்சியில், உலக சாதனைகள் கோல்டன் புத்தகத்தின் ஆசிய பிரிவின் தலைவர் மனிஷ் வைஷ்னோய் பங்கேற்றார். அவரது முன்னிலையில், மாணவி ரக் ஷா, தனது இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து கொண்டு, முன்னும், பின்னுமாக கொண்டு வந்து முழங்கைகளை தொட்டு சாதனை செய்தார். இதுபோன்று, 30 நிமிடங்களில், 3,000 முறை செய்தார்.

இதனால், அவரது பெயர் உலக சாதனைகள் கோல்டன் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. இதற்காக, அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுகுறித்து, மனிஷ் வைஷ்னோய் கூறுகையில், “உலக சாதனை படைத்த மாணவி ரக் ஷாவிற்கு வாழ்த்துகள். இவரின் சாதனை உலக அளவில் பரவ வேண்டும். இங்குள்ள ஒவ்வொரு மாணவரும், சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும். படிப்பு மட்டுமின்றி விளையாட்டுகளிலும் அனைவரும் ஈடுபட வேண்டும்,” என்றார்.

மாணவி ரக் ஷா கூறி யதாவது:

நான் சிறுவயதிலிருந்தே யோகா கற்கிறேன். கைகளை முன்னும், பின்னும் சுழற்றுவதெல்லாம் ஒரு விஷயமா என பலரும் கேலி செய்தனர். இப்போது, அவர்களுக்கு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து பாடம் புகட்டி உள்ளேன். மேலும், பல சாதனைகளை செய்ய உள்ளேன். எனக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us