தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாரிகுப்பம் 'மெமு' ரயில் பிப்., 2 முதல் இயங்கும்

 மாரிகுப்பம் 'மெமு' ரயில் பிப்., 2 முதல் இயங்கும்

 மாரிகுப்பம் 'மெமு' ரயில் பிப்., 2 முதல் இயங்கும்


ADDED : ஜன 30, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: கே.எஸ்.ஆர்., பெங்களூரு எனும் கிராந்தி வீரா சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில் இருந்து தினமும் பிற்பகல் 2:55 மணிக்கு மாரிகுப்பத்திற்கு புறப்பட்ட 'மெமு' ரயில், சமீபத்தில் ரத்து செய்யப்பட்டு, ஒயிட் பீல்டில் இருந்து பிற்பகல் 3:55 மணிக்கு மாரிகுப்பத்துக்கு புறப்பட்டது.

இதனால் கே.எஸ்.ஆர்., பெங்களூரு, கன்டோன்மென்ட், பெங்களூரு கிழக்கு, பையப்பனஹள்ளி, கே.ஆர்.புரம், ஹூடி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மாரிகுப்பம் வரை பயணிக்கும் பயணியர் சிரமப்பட்டனர். இதற்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

தென்மேற்கு ரயில்வே மண்டல மேலாளருக்கு பலரும் மனுக்கள் அனுப்பினர். இதை பரிசீலித்த ரயில்வே நிர்வாகம், பிப்ரவரி 2ம் தேதி முதல், கே.எஸ்.ஆர்.,பெங்களூரு- ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.55 மணிக்கு மாரிகுப்பம் மெமு ரயில் மீண்டும் இயங்கும் என்று ரயில்வே மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us