/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமண போராட்டம்: தாய் - மகள் பலி
/
திருமண போராட்டம்: தாய் - மகள் பலி
ADDED : செப் 18, 2025 07:51 AM

கலபுரகி : திருமணம் செய்ய வற்புறுத்தியதற்காக கிணற்றில் குதித்த மகளும் அவரை காப்பாற்ற குதித்த தாயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கலபுரகி மாவட்டம், தட்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஜகதேவி ஹங்கராகி, 45. இவரது மகள் மதுவந்தி ஹங்கராகி, 22. தன் மகள் மதுவந்திக்கு திருமணம் செய்து வை ப்பதற்காக ஜகதேவி வரன் பார்த்துக் கொண்டிருந்தார். இது மதுவந்திக்கு பிடிக்கவில்லை. அவர் தனக்கு திருமணம் வேண்டாம் என, பல முறை கூறி உள்ளார்.
அவரது பேச்சை மீறி வரன் தேடும் படலம் நடந்தது. இதனால், மனமுடைந்த மதுவந்தி நேற்று, தன் வீட்டருகே உள்ள கிணற்றில் குதித்தார். இதை பார்த்த, அவரது தாய் ஜகதேவி, மகளை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். ஆனால், இருவருமே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து ஆலந்த் போலீசார் விசாரிக்கின்றனர்.