தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.20 கோடியில் மகப்பேறு மருத்துவமனை

 ரூ.20 கோடியில் மகப்பேறு மருத்துவமனை

 ரூ.20 கோடியில் மகப்பேறு மருத்துவமனை


ADDED : மார் 29, 2026 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுப்பணி  சிறப்பு உள்கட்டமைப்புக்கான மூலதன ஆதரவு திட்டத்தின் கீழ், நகரின் முக்கிய, துணை முக்கிய சாலைகளை மேம்படுத்தவும், பிற உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசிடம், 667 கோடி ரூபாய் கேட்டு முன்மொழிவு அனுப்பப்படும்.

 போக்குவரத்து நெரிசலை குறைக்க, சாலைகளை அகலப்படுத்த, 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 சாலை சந்திப்புகளை அழகுபடுத்துதல், நடைபாதைகளை தரம் உயர்த்துதல், நடை மேம்பாலம் கட்ட, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 மூலதன பணிகள், பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு வார்டுக்கும் தலா 2.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 கோரகுண்டேபாளையா சந்திப்பில், சாலை விரிவாக்க பணிக்கு 2 கோடி ரூபாய்.

 சொக்கசந்திரா வித்யாநகரில் உள்ள பழமையான பாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் கட்ட ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 விஜயநகர் ஹம்பிநகர் வார்டில் கெம்பேகவுடா பவன் கட்ட 25 கோடி ரூபாய்.

 மாநகராட்சி கட்டடங்களில் சோலார் பொருத்த 2 கோடி ரூபாய்.

 கும்பலகோடு மின் மயானத்தை மேம்படுத்த ஐந்து கோடி ரூபாய்.

 மல்லேஸ்வரம், ராஜராஜேஸ்வரிநகர், தாசரஹள்ளி தொகுதிகளின் விரிவான வளர்ச்சிக்கு தலா 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 கெங்கேரி கணேஷ் விளையாட்டு மைதான மேம்பாட்டிற்கு 5 கோடி ரூபாய்.

 ஹனுமந்நகர் வார்டு குமாரசாமி பார்க்கில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தை மேம்படுத்த 3 கோடி ரூபாய்.

 பசவனகுடியின் தியாகராஜநகர் வார்டில் எம்.எல்.ஏ., எம்.பி., அலுவலகம் கட்ட திட்டம் தயாரிக்க ஒரு கோடி ரூபாய்.

 யஷ்வந்த்பூரில் 50 படுக்கைகள் கொண்ட மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனையை 20 கோடி ரூபாய் செலவில் கட்ட திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. கட்டுமான பணிக்காக இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us