/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கருக்கலைப்பை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
/
கருக்கலைப்பை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
கருக்கலைப்பை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
கருக்கலைப்பை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
ADDED : டிச 17, 2025 06:27 AM

பெலகாவி: ''கர்நாடகாவில் கருக்கலைப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் தனி அதிகாரி நியமிக்கப்படுவார்,'' என்று, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.
மேல்சபையில் பா.ஜ., உறுப்பினர் ரவி எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பதில்:
மாநிலத்தில் கருக்கலைப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் தனி அதிகாரி நியமிக்கப்படுவார். எந்த தாலுகாவில் ஆண், பெண் குழந்தைகள் விகிதம் அதிகரித்து வருகிறது என்பதை கண்காணிப்போம். சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் வலை அமைப்பை ஒடுக்க, உரிய நடவடிக்கை எடுப்போம்.
ரயில், பஸ்களில் கருக்கலைப்புக்கு எதிராக விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. விளம்பர பலகைகள், சுவரொட்டிகள், டிவி, ரேடியோ நிகழ்ச்சிகள் மூலமும் கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.