/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எலி காய்ச்சல் பாதிப்பு; ஒரு சதவீதம் குறைவு
/
எலி காய்ச்சல் பாதிப்பு; ஒரு சதவீதம் குறைவு
ADDED : டிச 17, 2025 06:28 AM
பெலகாவி: ''கர்நாடகாவில் எலி காய்ச்சல் ஒரு சதவீதம் குறைந்துள்ளது,'' என, மேல்சபையில் சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
பெலகாவியில் மேல்சபையில், பூஜ்ய நேரத்தில் நேற்று நடந்த விவாதம்:
பா.ஜ., - பிரதாப் சிம்மா நாயக்: கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 2,164 பேருக்கு எலி காய்ச்சல் பாதித்ததாக புகார்கள் பதிவாகியிருந்தன. இந்தாண்டு இதுவரை ஒரு சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பியில் சிறிது அதிகரித்து உள்ளது.
அமைச்சர் தினேஷ் குண்டுராவ்: கடந்தாண்டு இதே காலட்டத்தில் 2,164 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
நடப்பாண்டு 11 மாதங்களில், 2,134 புகார்கள் பதிவாகி, ஒரு சதவீதம் குறைந்து உள்ளது. எலி காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
எலி காய்ச்சலை கண்டறிய, தட்சிண கன்னடா மாவட்டத்தில் மாவட்ட சுகாதார மையம் திறக்கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் மாதிரிகள், இங்கு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

