/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருத்துவ கல்லுாரி செக்யூரிட்டி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
/
மருத்துவ கல்லுாரி செக்யூரிட்டி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மருத்துவ கல்லுாரி செக்யூரிட்டி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மருத்துவ கல்லுாரி செக்யூரிட்டி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ADDED : அக் 08, 2025 04:42 AM

கே.ஜி.ஹள்ளி : துப்பாக்கியால் சுட்டு காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு கே.ஜி.ஹள்ளியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை குடியிருப்பு வளாகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் லக்ஹன், 34. இவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்.
இவர் தங்கியிருந்த வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக சக ஊழியர்கள் நேற்று முன்தினம் கே.ஜி.ஹள்ளி போலீசாரிடம் தெரிவித்தனர்.
விசாரணையில், லக்ஹனுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. மனைவி ஊருக்கு சென்று இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத போது இரட்டைக்குழல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.