/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மருத்துவ படிப்பு கட்டணம் உயராது'
/
'மருத்துவ படிப்பு கட்டணம் உயராது'
ADDED : மே 18, 2025 06:32 AM

பெங்களூரு: தனியார் மருத்துவ, பல் மருத்துவ கல்லுாரிகளின் நிர்வாகிகளுடன், மருத்துவ கல்வி அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் பெங்களூரில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, அமைச்சரிடம், தனியார் கல்லுாரிகள் கேட்டுக் கொண்டன.
கூட்டம் முடிந்த பின் அமைச்சர் கூறியதாவது:
தனியார் மருத்துவ, பல் மருத்துவ கல்லுாரிகள் 2025 - 2026 கல்வி ஆண்டில் 10 முதல் 15 சதவீத கட்டணம் உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டன.
கடந்த முறை 10 சதவீதம் கட்டண உயர்வுக்கு, அரசு அனுமதி கொடுத்தது. இதனால் வரும் கல்வி ஆண்டில் கட்டணம் உயர்த்த நாங்கள் அனுமதிக்கவில்லை.
தனியார் கல்லுாரிகள் அழுத்தம் கொடுத்தாலும், மருத்துவ படிப்பு கட்டணம் உயர்த்தப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.