/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருத்துவ மாணவி தற்கொலையில் திருப்பம் காதலனால் உயிரை மாய்த்தது அம்பலம்
/
மருத்துவ மாணவி தற்கொலையில் திருப்பம் காதலனால் உயிரை மாய்த்தது அம்பலம்
மருத்துவ மாணவி தற்கொலையில் திருப்பம் காதலனால் உயிரை மாய்த்தது அம்பலம்
மருத்துவ மாணவி தற்கொலையில் திருப்பம் காதலனால் உயிரை மாய்த்தது அம்பலம்
ADDED : ஆக 28, 2025 11:04 PM

துமகூரு: வயிற்று வலியால் மருத்துவ மாணவி தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வேறொரு பெண்ணையும் காதலித்து, தன்னை காதலன் ஏமாற்றியதால் விபரீத முடிவெடுத்தது அம்பலமாகி உள்ளது.
துமகூரின் சிக்கநாயக்கனஹள்ளி சித்தனகட்டே கிராமத்தின் அஸ்வினி, 20. துமகூரில் தனியார் பாரா மெடிக்கல் கல்லுாரியில் மருத்துவம் படித்தார். அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டார்.
கடந்த 21ம் தேதி மாலையில் கல்லுாரி முடிந்து, வீட்டிற்கு வந்தவர், தன் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வயிற்று வலி தாங்காமல் மகள் தற்கொலை செய்ததாக, பெற்றோர் அளித்த புகாரில், சிக்கநாயக்கனஹள்ளி போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, அஸ்வினியின் அறையில் இருந்து, அவரது மொபைல் போனை பெற்றோர் எடுத்தனர்.
புகைப்படங்கள் இருக்கும் கேலரிக்குள் சென்று பார்த்தபோது, துாக்கு மாட்டிக் கொள்ளும் புகைப்படம் இருந்தது.
அந்த புகைப்படத்தை சேத்தன், 23, என்பவருக்கு, 'வாட்ஸாப்'பில் அனுப்பியதும் தெரிந்தது. அஸ்வினி உடன் படித்த மாணவியரிடம் கேட்டபோது, அஸ்வினியும், சேத்தனும் காதலித்தது தெரிய வந்தது.
சேத்தனுக்கு, அஸ்வினி அனுப்பிய குறுந்தகவல்களை படித்து பார்த்தபோது, இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதும், சேத்தன் வேறு ஒரு பெண்ணை காதலித்தது பிரச்னைக்கு காரணம் என்றும் தெரிந்தது.
தற்கொலை செய்யும் முன்பு, துாக்கு மாட்டிக் கொள்ளும் புகைப்படத்தை காதலனுக்கு, அஸ்வினி அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மனம் உடைந்த அஸ்வினி தற்கொலை செய்துள்ளார். அஸ்வினி பெற்றோர் அளித்த புகாரில், சேத்தன் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.