sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தேர்தலை சந்தியுங்கள்: விஜயேந்திரா சவால்

 தேர்தலை சந்தியுங்கள்: விஜயேந்திரா சவால்

 தேர்தலை சந்தியுங்கள்: விஜயேந்திரா சவால்


ADDED : நவ 27, 2025 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2025 07:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: “உங்களால் ஒழுங்காக ஆட்சி செய்ய முடியாவிட்டால், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்,” என, காங்கிரஸ் கட்சியினருக்கு, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா சவால் விடுத்துள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

காங்கிரசுக்கு 140 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது என்று, சித்தராமையா, சிவகுமார் கூறுகின்றனர். இத்தனை எம்.எல்.ஏ.,க்களை வைத்துக் கொண்டு, உங்களால் ஒழுங்காக ஆட்சி செய்ய முடியாவிட்டால், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்.

முதல்வர் பதவி பிரச்னையை தீர்க்காமல், பெலகா வி கூட்டத்தொடருக்கு வந்து நாடகம் போட வேண்டாம். கூட்டத்தொடரில் கரும்பு, மக்காச்சோள விவசாயிகள் சந்திக்கும் பிரச்னை பற்றி விவாதிக்க வேண்டி உள்ளது. பாக்கு விவசாயிகளும் சிக்கலில் உள்ளனர்.

காங்கிரசில் நடக்கும் உட்கட்சி சண்டையால், மாநில நிர்வாக இயந்திரம் முடங்கி விட்டது. மக்கள் பிரச்னையை தீர்க்க முதல்வருக்கு நேரம் இல்லை. அக்கட்சியின் உள்விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்.

சிவகுமார் அல்லது வேறு யாரும் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தாலும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எதிர்க்கட்சியாக பொறுப்பாக வேலை செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us