ADDED : டிச 03, 2025 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என்று அவர்களே கூறி உள்ளனர். கட்சிக்குள்ளும் எந்த பிரச்னையும் இல்லை. எதிர்க்கட்சியினரும், ஊடகத்தினரும் எங்கள் கட்சிக்குள் இருக்கும் அமைதியை கெடுக்க வேண்டாம்.கட்சிக்குள் தலைவர்களிடம் எந்த பிரச்னையும் இல்லை;
அவர்களை சமாதானப்படுத்த கட்சி தலைமை என்னை நியமிக்கவும் இல்லை. வேறொரு விஷயமாக ராகுலை சந்தித்தேன்.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எனக்கு எந்த பொறுப்பும் வழங்கவில்லை. அனைத்து விஷயங்களையும் கட்சியின் மூத்த தலைவர்கள் பார்த்து கொள்வர். இப்படிப்பட்ட கற்பனை கதை எவ்வாறு பரவுகிறது என்று தெரியவில்லை. - பிரியங்க் கார்கே தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், கர்நாடகா

