sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முஸ்லிம் தலைவர்களுடன் சந்திப்பா?

முஸ்லிம் தலைவர்களுடன் சந்திப்பா?

முஸ்லிம் தலைவர்களுடன் சந்திப்பா?


ADDED : மே 06, 2025 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 05:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'மங்களூரில் போலீசாருடன் தான் கூட்டம் நடத்தினோம். முஸ்லிம் தலைவர்களுடன் அல்ல' என, மாநில அமைச்சர் தினேஷ் குண்டுராவ் விளக்கம் அளித்துள்ளார்.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் பஜ்ரங்தள் பிரமுகர் சுஹாஸ் ஷெட்டி படுகாலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் மங்களூரில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அதுபோன்று முஸ்லிம் தலைவர்களுடனும் அவர்கள் கூட்டம் நடத்தியதாக படங்களுடன் செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக அமைச்சர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டு உள்ள அறிக்கை:

மங்களூரில் நடந்த விரும்பத்தக்காத சம்பவம் தொடர்பாக, நானும், அமைச்சர் பரமேஸ்வரும் சனிக்கிழமை சென்று போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினோம்.

இருப்பினும் சில ஊடகங்கள், முஸ்லிம் சமூக தலைவர்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதாக தவறான செய்திகளை வெளியிட்டன. முஸ்லிம் தலைவர்களுடன் கூட்டம் நடத்தவில்லை.

சர்க்கியூட் ஹவுசில் நாங்கள் இருவரும் இருந்தபோது, முஸ்லிம்கள், பிற சமூகங்கள், அமைப்புகளை சேர்ந்த குழுவினர் அங்கு வந்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை கேட்டோம்.

ஆனால் ஊடகங்களில் வெளியானபடி, முஸ்லிம் தலைவர்களுடன் எந்த சந்திப்பையும் நடத்தவில்லை. அன்று காலை 7:00 முதல் 11:00 மணி வரை சர்க்யூட் ஹவுசில் இருவரும் தங்கியிருந்தோம்.

இந்நேரத்தில் தட்சிண கன்னடா மாவட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எந்த சமூகத்தையும் திருப்திப்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை.

குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கும்படி, நாங்கள் இருவரும் போலீசாருக்கு அறிவுரை வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us