தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மேல்மலையனுார் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி நல அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் தேர்வு

 மேல்மலையனுார் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி நல அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் தேர்வு

 மேல்மலையனுார் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி நல அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் தேர்வு


ADDED : ஜூன் 28, 2026 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 10:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் பிரம்மபுரத்தில் உள்ள மேல்மலையனுார் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி நல அறக்கட்டளை சார்பில், நேற்று நிர்வாகிகள் குழுவிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

எம்.ஏ.பழனி தலைமையில் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அறக்கட்டளை தலைவராக கே.சடகோபன், துணை தலைவராக சந்திரசேகர், செயலராக கோதண்டன், பொருளாளராக ரவி, இணை செயலர்களாக வேணு, ராஜா, செயற்குழு உறுப்பினர்களாக வெங்கடேஷ், ஜி.சம்பத், தமிழ்செல்வன், சிவா, ஆர்.ரவி, அண்ணாதுரை, சங்கர் ஆகிய ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தீர்மானங்கள்: அறக்கட்டளை சார்பில் மேல்மலையனுாரில் ஆண்டுதோறும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். பெங்களூரில் பொங்கல் விழா, ஆண்டு விழா சிறப்பாக நடத்தப்படும்.

மேல்மலையனுாரில் உள்ள அறக்கட்டளையின் இடத்தை சுற்றி வேலி, போர் வெல் சரிசெய்து பராமரிப்பது, இரண்டு மாதத்திற்குள் புதிய உறுப்பினர்கள், நிர்வாகிகள் தங்களின் பெயரை புதுப்பித்து பதிவு செய்ய வேண்டும்.

ஆண்டு தோறும் டிசம்பரில் நிர்வாகிகள் செயற்குழு கூட்டத்தில் வரவு - செலவு கணக்குகள் சரிபார்க்கப்படும். அறக்கட்டளையின் வளர்ச்சி பணிகள், செயல்பாடுகள் குறித்த விபரங்கள் பற்றி தலைவர் கே.சடகோபன் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us