/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கழிப்பறை சுத்தம் செய்யும் மாணவர்கள் மேல்சபையில் உறுப்பினர்கள் அதிருப்தி

ADDED : ஆக 12, 2025 05:39 AM
பெங்களூரு : பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய, மாணவர்களை பயன்படுத்துவது குறித்து, மேல்சபையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
மேல்சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர்கள் மது மாதேகவுடா, ராமோஜி ராவ் உட்பட பலரும், பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய, மாணவர்களை பயன்படுத்துவது குறித்து, குரல் எழுப்பினர்.
இவர்களுக்கு பதிலளித்து கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறியது:
பள்ளிகளில் மாணவர்களை கழிப்பறைகள் சுத்தம் செய்ய பயன்படுத்த கூடாது என, ஆசிரியர்களுக்கு கடுமையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன.
மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து சார்பில் பள்ளிகளுக்கு வழங்கும் நிதியுதவியில் 10 சதவீதம் தொகையை, கழிப்பறை பராமரிப்பு ஊழியர்களுக்கு வழங்கும்படி உத்தரவிப்பட்டுள்ளது. பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய, தனியாக ஊழியர்களை நியமிக்க முடியாது. இதற்கு நிதித்துறை அனுமதி அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது உறுப்பினர்கள், 'பெரும்பாலான பள்ளிகளில், கழிப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்கின்றனர். இதுகுறித்து, ஆசிரியர்களுக்கு மீண்டும் உத்தரவிடுங்கள்' என, அறிவுறுத்தினர்.