/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நிமான்ஸ் மருத்துவமனையில் 17, 18ல் 'மன ஆரோக்கிய சந்தை'
/
நிமான்ஸ் மருத்துவமனையில் 17, 18ல் 'மன ஆரோக்கிய சந்தை'
நிமான்ஸ் மருத்துவமனையில் 17, 18ல் 'மன ஆரோக்கிய சந்தை'
நிமான்ஸ் மருத்துவமனையில் 17, 18ல் 'மன ஆரோக்கிய சந்தை'
ADDED : அக் 14, 2025 04:57 AM

பெங்களூரு: மன நலம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனை, இம்மாதம் 17, 18ம் தேதிகளில், 'மன ஆரோக்கிய சந்தை' ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து, நிமான்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
பொது மக்களுக்கு மனநல ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இம்மாதம் 17, 18ல் 'மன ஆரோக்கிய சந்தை'யை பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது. நிமான்ஸ் கன்வென்ஷன் ஹாலில் நடக்கும் இச்சந்தையில், மன நலன் தொடர்பான தவறான எண்ணங்களை போக்கி, நோயை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாகும்.
பொது மக்கள் இதில் பங்கேற்று, மன நல ஆரோக்கியம், கல்வி தொடர்பாக வல்லுநர்களுடன் கலந்துரையாடலாம். மன ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண திட்டங்கள், மருத்துவ சேவைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
மூளை மாதிரி, மன நலம் சம்பந்தப்பட்ட கல்விக்கான பொருட்களை பார்வையிடலாம். மாணவர்கள், பொதுமக்கள் என விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். இன்றைக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பலரும் இழிவாக பார்க்கின்றனர்.
இதனால், மன நல நோய்களுக்கு சிகிச்சை பெற, பலரும் தயங்குகின்றனர். இவர்களை ஊக்கப்படுத்தி, சிகிச்சை பெற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
உடல் ஆரோக்கியம் போன்று, மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். வெவ்வேறு பிரிவுகளில் கிடைக்கும் சிகிச்சைகள் குறித்து, மக்களுக்கு தகவல் தெரிவிப்பது, மன ரீதியான கல்வியை அதிகரிப்பது, சந்தையின் முக்கிய நோக்கமாகும். மன நலம் பாதிப்புள்ளவர்களை அடையாளம் கண்டு, சிகிச்சை அளிக்க இது உதவியாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.