ADDED : மார் 29, 2025 04:57 AM

பெலகாவி: குடும்பத்தினர் தன்னை சங்கிலி போட்டுக் கட்டி, அறைக்குள் அடைத்த கோபத்தில், தன் மர்ம உறுப்பை வெட்டிக் கொண்ட மன நோயாளி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி தாலுகாவின் ஹிடகல் கிராமத்தில் வசிப்பவர் கெம்பண்ணா, 35. இவர் சமீப நாட்களாக, மனநோயால் அவதிப்பட்டார்.
இவரை வீட்டிலேயே இருக்கும்படி குடும்பத்தினர் கூறினாலும் கேட்பதில்லை. அவ்வப்போது வீட்டில் இருந்து வெளியே சென்று, காணாமல் போவது வழக்கம்.
இவரை தேடுவதே பெரும் தலைவலியாக இருந்ததால், வெளியே செல்லாமல் இருக்க, குடும்பத்தினர் இவரது கால்களில் சங்கிலி கட்டி, அறையில் அடைத்து வைத்திருந்தனர்.
இதனால் கோபத்தில் இருந்த கெம்பண்ணா, நேற்று காலையில், தன் மர்ம உறுப்பை கத்தியால் வெட்டிக் கொண்டார். இதை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக, பெலகாவியின் பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
யம்கன்மரடி போலீசார், கிராமத்துக்கு வந்து விசாரித்தனர்.