/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சங்கிலியால் கட்டப்பட்டிருந்த மனநலம் பாதித்தவர் மீட்பு
/
சங்கிலியால் கட்டப்பட்டிருந்த மனநலம் பாதித்தவர் மீட்பு
சங்கிலியால் கட்டப்பட்டிருந்த மனநலம் பாதித்தவர் மீட்பு
சங்கிலியால் கட்டப்பட்டிருந்த மனநலம் பாதித்தவர் மீட்பு
ADDED : ஜூலை 17, 2025 10:56 PM

உத்தரகன்னடா: மன நலம் பாதிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக வீட்டில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தவர் மீட்கப்பட்டார்.
உத்தரகன்னடா மாவட்டம், தாண்டேலி தாலுகாவின், ஆலுார் கிராமத்தில் வசிப்பவர் விநாயகா வசந்த சோஹனசேட், 37. இவரது தந்தை, தாய்க்கு இரண்டு மகன்கள். விநாயகா இரண்டாவது மகன்.
இவரது தந்தை தபால் துறையில் பணியாற்றினார். பணியில் இருந்தபோதே, அவர் இறந்ததால் கருணை அடிப்படையில், அவரது கடைசி மகன் விநாயகாவுக்கு தபால் துறையில் வேலை கிடைத்தது. போஸ்ட் மேனாக பணியாற்றினார்.
ஆனால் சில ஆண்டுகளாக, இவரது மன நலம் பாதிக்கப்பட்டது. விநாயகாவின் குடும்பத்தினருக்கு சொந்தமாக தாண்டேலி தாலுகாவில் 25 ஏக்கர் நிலம் உள்ளது. பெலகாவி உட்பட, பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. விநாயகா மனநிலை பாதிக்கப்பட்டதால், இவரது அண்ணன் சஞ்சய் சொத்துகளை நிர்வகிக்கிறார்.
மன நலம் பாதிக்கப்பட்ட விநாயகாவுக்கு, பல இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமடையவில்லை. கரும்பு தோட்டத்துக்கு தீ வைப்பது, தான் தங்கியிருந்த குடிசைக்கு தீ வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டார். இவரது தொந்தரவு தாங்க முடியாமல், குடும்பத்தினர் அவரை சங்கலியால் கட்டி வைத்திருந்தனர்.
இரண்டு ஆண்டுகளாக கட்டடம் ஒன்றில் அடைத்திருந்தனர். சரியான உணவு, சிகிச்சை இல்லாமல் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை அடைத்திருந்த அறையில் துாய்மையும் இல்லாமல் அவதிப்பட்டார். இதை கவனித்த அப்பகுதியினர், தொண்டு அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர்.
நேற்று முன்தினம் அங்கு வந்த அமைப்பினர், போலீசாரின் உதவியுடன் விநாயகாவை சங்கலியில் இருந்து விடுவித்தனர். தாண்டேலியில் முதலுதவி சிகிச்சைக்கு பின், கார்வார் அரசு மருத்துவமனையில் விநாயகா சேர்க்கப்பட்டார்.