தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடகாவில் குளிர் மேலும் தொடரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

 கர்நாடகாவில் குளிர் மேலும் தொடரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

 கர்நாடகாவில் குளிர் மேலும் தொடரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


ADDED : நவ 30, 2025 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'வெப்பநிலை குறைவு, குளிர் காற்று மற்றும் 'டிட்வா' புயல் காரணமாக, மாநிலத்தில் இன்னும் சில நாட்கள் குளிர் தொடரும். இன்று முதல் மாநிலத்தின் பல இடங்களில் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பாட்டீல் கூறியதாவது:

இலங்கையின் வடக்கு பகுதியில் உருவாகி உள்ள டிட்வா புயல் காரணமாக, கர்நாடகாவின் சிக்கமகளூரு, துமகூரு, ஹாசன், குடகு, சாம்ராஜ் நகர், ராம்நகர், கோலார், சிக்கபல்லாபூர், மைசூரு, பெங்களூரு நகரம், பெங்களூரு கிராமம் மாவட்டங்களில் இன்று இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

பெங்களூரு உட்பட சில இடங்களில் இரண்டு நாட்களுக்கு குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். பெங்களூரில் அதிகபட்ச வெப்பநிலை, சராசரியாக நான்கு டிகிரி செல்ஷியஸ் குறையும் வாய்ப்பு உள்ளது.

உடுப்பி, தட்சிண கன்னடா, ஷிவமொக்கா, பல்லாரி, விஜயநகர் மாவட்டங்களின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடந்த ஒரு வாரமாக வெப்பநிலை குறைந்து, குளிர் அதிகரித்துள்ளது. பெங்களூரு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மழையுடன் மேகமூட்டமான வானிலை இருக்கும்.

காலையில் சில பகுதிகளில் மூடுபனி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 24 டிகிரி செல்ஷியசும், குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்ஷியசும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சம் 27.4 டிகிரி செல்ஷியசும், குறைந்தபட்சம் 12 டிகிரி செல்ஷியசும்; விஜயபுராவில் அதிகபட்சம் 28.5 டிகிரி செல்ஷியசும், குறைந்தபட்சம் 12 டிகிரி செல்ஷியசும் பதிவாகி உள்ளது.

மாநிலத்தில் பல பகுதிகளில் இன்னும் சில நாட்கள் கடும் குளிர் நிலவும். எனவே, அனைத்து வயதினரும் ஸ்வெட்டர், மப்ளர், ஜாக்கெட் அணிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூரில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக குளிர் அதிகரித்துள்ளது. காலை முதல் மாலை வரை குளிராக உள்ளது. வீட்டின் வாசல் கதவு, ஜன்னலை மூடிய பின்னரும், வீட்டினுள் குளிராக உள்ளது.

வயதானவர்கள், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் ஸ்வெட்டர், மப்ளர், கால் உறைகள் அணிந்து கொள்கின்றனர். சாப்பிட்ட பாத்திரத்தை சுத்தம் செய்ய கூட முடியாத அளவில், நீர் மிகவும் குளிராக உள்ளது.

பணிக்கு செல்வோர், கால் உறை அணிந்து ஜெர்கின், குல்லா அணிந்து தான் செல்கின்றனர். அலுவலகத்துக்குள் சென்ற பின்னரும், ஜெர்கின் குல்லா கழற்றுவதில்லை. எப்போது வெயில் வரும் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us