/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ கட்டண ஆய்வு குழுவினர் வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.26 லட்சம்
/
மெட்ரோ கட்டண ஆய்வு குழுவினர் வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.26 லட்சம்
மெட்ரோ கட்டண ஆய்வு குழுவினர் வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.26 லட்சம்
மெட்ரோ கட்டண ஆய்வு குழுவினர் வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.26 லட்சம்
ADDED : ஏப் 06, 2025 05:35 AM

பெங்களூரு : பெங்களூரு மெட்ரோ நிறுவனம், மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய அமைத்த குழுவினர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, 26 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது.
மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்த, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டது. இதற்காக வெளிநாடுகளில் மெட்ரோ ரயில் கட்டணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது.
இக்குழுவில் மதராஸ் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தரணி, மத்திய உள்துறை மற்றும் நகர விவகார அமைச்சகத்தின் ஓய்வு பெற்ற கூடுதல் செயலர் சதேந்தர் பால் சிங், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரமண ரெட்டி ஆகியோர் இருந்தனர்.
இவர்களுடன் பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகளும் இருந்தனர். இக்குழுவினர் சென்று டில்லி மற்றும் சென்னை மெட்ரோவை ஆய்வு செய்தனர். அதன் பின் குழுவின் மூவர் ஹாங்காங், சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.
ஏழரை ஆண்டுகளுக்கு பின், கட்டணம் உயர்த்தப்படுவதால், ஆண்டுக்கு 14.02 வீதம் 105.15 சதவீதம் கட்டணத்தை உயர்த்தும்படி, ஆய்வு குழுவினர் சிபாரிசு செய்திருந்தனர். அதேபோன்று கட்டண உயர்வு கமிட்டி, ஆண்டுக்கு 6.87 வீதம், 55.55% கட்டணம் உயர்த்தலாம் என, ஆலோசனை கூறியது. இதன்படியே கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், கட்டண உயர்வுக்காக அமைக்கப்பட்ட குழுவினர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்துக்கு செலவழிக்கப்பட்ட தொகை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் கேட்டிருந்தார்.
மெட்ரோ நிறுவனம் அளித்த தகவலில், ஆய்வுக்குழுவினர் வெளிநாட்டு பயணத்துக்கு, 26 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.