ADDED : ஆக 09, 2026 12:04 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: 'இன்று காலை இரண்டு மணி நேரம் இளஞ்சிவப்பு வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது' என நம்ம மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ஒயிட்பீல்டு - செல்லகட்டா இடையேயான இளஞ் சிவப்பு மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள சுவாமி விவேகானந்தா சாலை - இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே அவசர தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
எனவே, இன்று காலை 7:00 முதல் 9:00 மணி வரை பையப்பனஹள்ளி - எம்.ஜி., சாலை ரயில் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில்கள் தற்காலிகமாக இயங்காது. 9:00 மணிக்கு மேல் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
