sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

நாளை அதிகாலை 3:30 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கம்

/

நாளை அதிகாலை 3:30 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கம்

நாளை அதிகாலை 3:30 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கம்

நாளை அதிகாலை 3:30 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கம்


ADDED : ஏப் 26, 2025 09:17 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 09:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : மாரத்தான் போட்டி நடக்க உள்ளதால், பெங்களூரின் நான்கு முனையங்களில் இருந்தும் நாளை மெட்ரோ ரயில் சேவை, அதிகாலை 3:30 மணிக்கு துவங்குகிறது.

பெங்களூரில் நாளை 'டி.சி.எஸ்., வோர்ல்டு 10 கே - 2025' என்ற பெரிய மாரத்தான் போட்டி நடக்கிறது. இதில், பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து பிரபல தடகள வீரர்கள், வீராங்கனைகள் பலரும் பெங்களூரு வருகை தந்துள்ளனர். இதில் பொது மக்களும் கலந்து கொள்ளலாம்.

இப்போட்டி, காலை 6:00 மணி அளவில் துவங்குகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள், விளையாட்டை பார்க்க வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, பெங்களூரின் நான்கு முனையங்களில் இருந்தும் மெட்ரோ ரயில் சேவை நாளை அதிகாலை 3:30 மணிக்கு துவங்க உள்ளது என மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று அறிவித்தது.

இதுகுறித்து, தன் 'எக்ஸ்' பக்கத்தில் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட பதிவு:

நாளை அதிகாலை 3:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை 12 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7:00 மணிக்கு மெட்ரோ சேவை துவங்கும்.

ஆனால், மாரத்தான் போட்டி நடப்பதால், வீரர்கள், பார்வையாளர்களின் வசதிக்காக நாளை முன்கூட்டியே ரயில் சேவை துவங்க உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us