பத்து மாதங்களில் 15 முறை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
பத்து மாதங்களில் 15 முறை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
ADDED : ஆக 26, 2026 02:53 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: தொழில்நுட்ப கோளாறால், பத்து மாதங்களில் 15 முறை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் மஞ்சள், ஊதா, பச்சை ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொழில்நுட்ப கோளாறுகளால் அடிக்கடி ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படுகிறது.
அவ்வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த ஜூலை வரை பத்து மாதங்களில் 15 முறை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பச்சை வழித்தடத்தில் 7 முறை; ஊதா 5 முறை; மஞ்சள் 3 முறை என மொத்தம் 15 முறை ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கதவுகள் சரியாக இயங்காதது, பிரேக் பழுதடைதல், மின்சார கோளாறு, தண்டவாள இன்சுலேட்டர் பழுது உள்ளிட்ட காரணங்களால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
